புறநகர் ரெயில் விபத்து எதிரொலி: தாமதமாக இயக்கப்படும் மின்சார ரெயில்கள்.!
|ஆவடி அருகே புறநகர் ரெயில் விபத்து காரணமாக மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
சென்னை,
ஆவடி அருகே அண்ணனூர் பணிமனையில் இருந்து ஆவடி ரெயில் நிலையத்திற்கு வந்த ரெயில் இன்று காலை தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது. புறநகர் ரெயிலின் 4 பெட்டிகள் இருப்புப்பாதையை விட்டு கீழே இறங்கி விபத்துக்கு உள்ளானது.
இந்த ரெயில் விபத்து காரணமாக, அரக்கோணத்திலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்துக்கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. பின்னர் 4 வழிப்பாதையில் ஒரேயொரு தண்டவாளத்தில் மட்டுமே ரெயில்கள் சென்ட்ரல் நோக்கி இயக்கப்பட்டன. தற்போது வரை இதே நிலைமைதான் நீடித்து வருகிறது. விபத்தில் சிக்கிய மின்சார ரெயிலின் பெட்டிகளை மீட்க சுமார் 500க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், விபத்து காரணமாக, சென்னை செண்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம், திருத்தனி, திருவள்ளூர், ஆவடி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து மின்சார ரெயில்களும் தாமதாமாக இயக்கப்பட்டு வருகின்றன.