< Back
மாநில செய்திகள்
திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் துணை மின்நிலையம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் துணை மின்நிலையம்

தினத்தந்தி
|
26 Jun 2022 1:23 AM IST

பொன்னமராவதி அருகே திறப்பு விழாவுக்காக துணை மின்நிலையம் காத்திருக்கிறது.

பொன்னமராவதி அருகே நகரப்பட்டியை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அடிக்கடி மின்பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியை ேசர்ந்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நகரப்பட்டியில் ரூ.15 கோடி திட்ட மதிப்பீட்டில் அ.தி.மு.க. ஆட்சியின்போது நகரப்பட்டியில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த துணை மின்நிலையம் கடந்த ஒரு ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. இதன்காரணமாக அப்பகுதி விவசாயிகள் மின்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த துணை மின் நிலையம் திறக்கப்பட்டால் பாலக்குறிச்சி, கலிங்கிபட்டி, நகரப்பட்டி அம்மன்குறிச்சி, ஆலவயல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் பயன் பெறுவர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்