< Back
மாநில செய்திகள்
சிங்கம்புணரியில் ரூ.2.82 கோடியில் துணை மின்நிலையம்
சிவகங்கை
மாநில செய்திகள்

சிங்கம்புணரியில் ரூ.2.82 கோடியில் துணை மின்நிலையம்

தினத்தந்தி
|
16 Aug 2022 10:27 PM IST

சிங்கம்புணரியில் ரூ.2.82 கோடியில் துணை மின்நிலையத்தை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் ரூ.2 கோடியே 82 லட்சம் மதிப்பில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது. இதனை சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிகாட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். முன்னதாக திறப்பு விழாவிற்கு வந்தவர்களை செயற்பொறியாளர் செல்லதுரை வரவேற்றார். இதில், பேரூராட்சி தலைவர் அம்பல முத்து, துணைத் தலைவர் இந்தியன் செந்தில், தி.மு.க. அவைத்தலைவர் சிவக்குமார், நகர செயலாளர் கதிர்வேல், ஒன்றிய செயலாளர் பூமிநாதன், ஒன்றிய துணை செயலாளர் சிவபுரி சேகர், மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், நகர பொருளாளர் செந்தில் கிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன், ஜமாத் தலைவர் ராஜா முகமது, பிரதிநிதி புகழேந்தி, ராஜா, பார்த்திபன் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்