< Back
மாநில செய்திகள்
உளுந்து சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியம்: அதிகாரி தகவல்
கரூர்
மாநில செய்திகள்

உளுந்து சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியம்: அதிகாரி தகவல்

தினத்தந்தி
|
2 Feb 2023 12:24 AM IST

கரூர் மாவட்டத்தில் உளுந்து சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுவதாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

உளுந்து சாகுபடி

கரூர் வேளாண்மை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கரூர் மாவட்டத்தில் 2022 -2023 ஆண்டு சம்பா நெல் அறுவடைக்கு பின் பயறு சாகுபடி திட்டத்தின் கீழ் வேளாண் விளைநிலங்களில் மண்வளத்தினை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு குறைந்த செலவில் கூடுதல் வருமானம் கிடைத்திடவும் சம்பா நெல் அறுவடைக்கு பின் உளுந்து சாகுபடி செய்திட இலக்கு நிர்ணியிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கரூர் வட்டாரத்திற்கு 100 ஏக்கர், தாந்தோணி வட்டாரத்திற்கு ்250 ஏக்கர், அரவக்குறிச்சி வட்டாரத்திற்கு 25 ஏக்கர், க.பரமத்தி வட்டாரத்திற்கு 250 ஏக்கர், குளித்தலை வட்டாரத்திற்கு 2000 ஏக்கர், தோகைமலை வட்டாரத்திற்கு 1500 ஏக்கர், கடவூர் வட்டாரத்திற்கு 125 ஏக்கர், கிருஷ்ணராயபுரம் வட்டாரத்திற்கு 1250 ஏக்கர் என கரூர் மாவட்டத்தில் மொத்தமாக 5500 ஏக்கர் பரப்பளவில் உளுந்து சாகுபடி செய்திட இலக்கு வழங்கப்பட்டுள்ளது.

விதைகளுக்கு மானியம்

அதன்படி உளுந்து பயிர் விதைகள் கரூர் வட்டாரத்திற்கு 300 கிலோ, தாந்தோணி வட்டாரத்திற்கு 1100 கிலோ, அரவக்குறிச்சி வட்டாரத்திற்கு 1500 கிலோ, க.பரமத்தி வட்டாரத்திற்கு 660 கிலோ, குளித்தலை வட்டாரத்திற்கு 10060 கிலோ, தோைகமலை வட்டாரத்திற்கு 1370 கிலோ, கடவூர் வட்டாரத்திற்கு 600 கிலோ, கிருஷ்ணராயபுரம் வட்டாரத்திற்கு 8300 கிலோ அந்ததந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

எனவே கரூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாயிகள், நெல் அறுவடைக்கு பின் உளுந்து சாகுபடிக்கு தேவையான உளுந்து விதைகளை ஏக்கர் ஒன்றுக்கு ரூ.400 மானியத்தில் பெற்று பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்