பெரம்பலூர்
வெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்க மானியம்
|வெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்க மானியம் வழக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தோட்டக்கலை இயக்க திட்ட செயலாக்கத்திற்கு பெரம்பலூர் மாவட்டத்திற்கு 2023-24 ஆம் நிதியாண்டில் வெங்காய சாகுபடி செய்யும் விவசாயிகள் அறுவடைக்கு பின்பு சேமித்து வைப்பதற்காக 25 மெட்ரிக் டன் (1 யூனிட்) கொண்ட குறைந்த செலவிலான வெங்காய சேமிப்பு கிடங்கு 50 சதவீத மானியத்தில் பின்னேற்பு மானியமாக ரூ.87 ஆயிரத்து 500 வழங்க மட்டும் நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தின் கீழ் இதுவரை பயன்பெறாத விவசாயிகள் பயன்பெற விருப்பம் இருப்பின் தங்களது நிலத்திற்கான சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, வங்கிகணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் வருகிற 20-ந்தேதிக்குள் சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாகவோ அல்லது விவசாயிகள் தாங்களாகவே www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம், என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.