செங்கல்பட்டு
மின்இணைப்புடன் ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம் - வேளாண் அதிகாரி தகவல்
|மின் இணைப்புடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என்று வேளாண் அதிகாரி அசோக் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அசோக் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் 2023-24 நிதியாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் 73 பஞ்சாயத்துகளில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் அரசு மானியத்துடன் பண்ணை குட்டைகள், உழுவை எந்திரங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு மின் இணைப்புடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைத்தல் போன்ற சேவைகள் வழங்கப்பட உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆத்தூர், திருவடிசூலம், சிங்கபெருமாள் கோவில், கொளத்தூர், ரெட்டிபாளையம், வில்லியம்பாக்கம், காயரம்பேடு, வீராபுரம், சிறுபேர்பூண்டி, பள்ளிப்பேட்டை, எல்.எண்டத்தூர், தண்டரைபுதுச்சேரி, கீழ்அத்திவாக்கம், பெரும்பேர்கண்டிகை, மதூர், சீதாபுரம், நெடுங்கல், விண்ணம்பூண்டி, ஒரத்தூர், கடம்பூர், சின்னகயப்பாக்கம், சிறுநகர், பொலம்பாக்கம், பெரும்பாக்கம் பஞ்சாயத்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர சோத்துபாக்கம், வெடால், கீழ்மருவத்தூர், புத்தரங்கோட்டை, பெருங்கரணை, சரவம்பாக்கம், நீர்பேர், நெதபாக்கம், கள்ளபிராணபுரம், நெல்வாய், நல்லாமூர், பெருவேலி, ஜமின்புதூர், நெசபாக்கம், பழையனூர், வில்வராயன்நல்லூர், இரும்பேடு, பவுஞ்சூர், லத்தூர், நெல்வாய், வடபட்டினம், கீழச்சேரி, கனாத்தூர், இரன்யசித்தி, செங்காட்டுர், நெமிலி, பட்டிகாடு, வெங்கம்பாக்கம், குழிபந்தண்டலம், எடையூர், மேலேரிபாக்கம், ஈச்சங்கரணை, குண்ணத்தூர், தத்தலூர், நரப்பாக்கம், எச்சூர், அனுமந்தபுரம், அருங்குன்றம், மானாமதி, பொன்மார், ஆலத்தூர் நெல்லிகுப்பம், கன்னத்தூர் ரெட்டிகுப்பம், படூர், புதுப்பாக்கம், ஓரகடம், வேங்கைவாசல், நன்மங்களம், திருவெஞ்சேரி பஞ்சாயத்துகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் அனைவரும் தங்களுடைய நில உரிம விவரம் (பட்டா, சிட்டா), ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் போன்ற விவரங்களுடன் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குனரைதொடர்பு கொண்டு பதிவு செய்திடுங்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.