< Back
மாநில செய்திகள்
விவசாயிகளுக்கு மானியத்தில் உழவு எந்திரங்கள்
நீலகிரி
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு மானியத்தில் உழவு எந்திரங்கள்

தினத்தந்தி
|
5 Sept 2023 1:45 AM IST

தொழிலாளர்கள் பற்றாக்குறையால் விவசாய பணி பாதிக்கப்படுகிறது. இதனால் விவசாயத்தை பாதுகாக்க 50 சதவீத மானியத்தில் வேளாண் உழவு எந்திரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

கூடலூர்

தொழிலாளர்கள் பற்றாக்குறையால் விவசாய பணி பாதிக்கப்படுகிறது. இதனால் விவசாயத்தை பாதுகாக்க 50 சதவீத மானியத்தில் வேளாண் உழவு எந்திரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தொழிலாளர்கள் பற்றாக்குறை

கூடலூர் பகுதியில் தேயிலை, காபி, நெல் மற்றும் பல்வேறு வகையான காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு விளையும் காய்கறிகள் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா மற்றும் சில மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. இந்தநிலையில் விவசாய பணிகளை மேற்கொள்ள கூலி தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது.

இதனால் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பராமரிப்பு பணிகளை செய்ய முடியாமல், கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் விவசாயத்தை கைவிடும் நிலை உள்ளது. இதனால் விவசாயத்தை பாதுகாக்க தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறை சார்பில், 50 சதவீத மானியத்தில் பல்வேறு உபகரணங்களை வழங்கி வருகிறது. கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள உழவு, களை எடுத்தல் உள்பட பல்வேறு எந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

உழவு எந்திரங்கள்

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சுனில் தலைமை தாங்கினார். வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் பூபாலன், உதவி பொறியாளர்கள் ரகு, பிரகாஷ், தினேஷ்குமார், இளநிலை பொறியாளர் ராம்குமார் ஆகியோர் விவசாயிகளுக்கு வேளாண் உழவு எந்திரங்களை வழங்கினர். இதில் துணைத்தலைவர் ரெஜி மேத்யூ, வார்டு கவுன்சிலர்கள் சத்யன், பிந்து, பீனா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள் கூறும்போது, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2023-2024-ம் ஆண்டிற்கு 2,500 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு 50 சதவீத மானியத்தில் வேளாண் உழவு எந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது என்றனர்.

மேலும் செய்திகள்