< Back
மாநில செய்திகள்
விவசாய தொழிலாளர்கள் நிலம் வாங்க மானியத்துடன் கூடிய கடன்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

விவசாய தொழிலாளர்கள் நிலம் வாங்க மானியத்துடன் கூடிய கடன்

தினத்தந்தி
|
5 Dec 2022 12:30 AM IST

ஆதி திராவிடர்-பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் நிலம் வாங்க மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது.

மானியத்துடன் கூடிய கடன்

பெரம்பலூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் 2 ஆதி திராவிடர் மற்றும் 1 பழங்குடியின விவசாய தொழிலாளர்களுக்கு நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி, திட்டத் தொகையில் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் இனத்தைச் சார்ந்த மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பதாரர் விவசாயத்தை தொழிலாக கொண்டவராகவும் அல்லது விவசாய கூலி தொழில் செய்பவராகவும் இருக்க வேண்டும். தொழில் மற்றும் விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் பெற்றிருக்க கூடாது. இத்திட்டத்தின் கீழ் நிலமற்றவர்கள் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம். வாங்கப்படும் நிலத்தினை 10 ஆண்டுகளுக்கு விற்பனை செய்யக்கூடாது என்ற நிபந்தனைகளுடன் விண்ணப்பிக்கலாம்தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு கொள்ளலாம்

மேற்காணும் திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் விண்ணப்பம் செய்ய பெரம்பலூர் மாவட்ட தாட்கோ, மேலாளர் அலுவலகத்தை அணுகி, உரிய விவரத்தினை பெற்று புகைப்படம், சாதி சான்று, வருமான சான்று, குடும்ப அட்டை அல்லது இருப்பிட சான்று, ஆதார் அட்டை, ஆகிய சான்றுகளுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04328 - 276317, 9445029470 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய http://application.tahdco.com., http://fast.tahdco.com. என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்