< Back
மாநில செய்திகள்
விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் வழங்கும் நிகழ்ச்சி
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் வழங்கும் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
8 July 2022 11:25 PM IST

கீழ்வேளூரில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

சிக்கல்:

கீழ்வேளூரில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார ஆத்மா குழு தலைவர் கோவிந்தராசன் முன்னிலை வகித்தார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர்‌ அகண்ட ராவ்‌ தலைமை தாங்கினார். இதில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் நூறு சதவீத மானியத்தில் 5 விவசாயிகளுக்கு உரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கீழ்வேளூர் வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ராஜலட்சுமி, பேரூராட்சி மன்ற தலைவர் இந்திரா காந்தி, ஆத்மா குழு உறுப்பினர் அட்சயலிங்கம், துணை வேளாண்மை அலுவலர் பிரான்சிஸ் உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்