< Back
மாநில செய்திகள்
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து இந்து ஆலயங்களை விடுவிக்க கோரி முதல்-அமைச்சருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்
மாநில செய்திகள்

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து இந்து ஆலயங்களை விடுவிக்க கோரி முதல்-அமைச்சருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்

தினத்தந்தி
|
2 Dec 2022 8:38 AM IST

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து இந்து ஆலயங்களை விடுவிக்கக் கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து இந்து ஆலயங்களை விடுவிக்க கோரி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழகத்தில் நீண்ட காலமாக இந்து ஆலயங்கள் மற்றும் மத அமைப்புகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு இருப்பது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25 மற்றும் 26 ஆகியவற்றுக்கு எதிரானது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக 2014-ம் ஆண்டு தான் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை சுப்பிரமணியன் சுவாமி மேற்கோள் காட்டியுள்ளார்.

அதில் ஆலயத்தின் எந்த ஒரு மத செயல்பாடுகளின் உரிமைகளையும் எந்த ஒரு அரசும் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்று தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து இந்து ஆலயங்கள் மற்றும் மத அமைப்புகளை விடுவிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்ய தவறினால் தமிழக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாகவும் சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்