< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்பிப்பு
|14 July 2023 8:59 PM IST
தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரிடம் திட்ட அறிக்கையை மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் வழங்கினார்.
சென்னை,
மதுரை மற்றும் கோவையில் மேற்கொள்ளப்பட இருக்கும் மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கையை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் மீனாவிடம் மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் சித்திக் வழங்கினார்.
மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதே போல் கோவையில் அவினாசி சாலையில் இருந்து கருமத்தம்பட்டி வரை மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.