< Back
மாநில செய்திகள்
சுப்புலட்சுமி ஜெகதீசன் பா.ஜ.க.வில் சேர மாட்டார் - டி.கே.எஸ்.இளங்கோவன் நம்பிக்கை
மாநில செய்திகள்

'சுப்புலட்சுமி ஜெகதீசன் பா.ஜ.க.வில் சேர மாட்டார்' - டி.கே.எஸ்.இளங்கோவன் நம்பிக்கை

தினத்தந்தி
|
21 Sept 2022 12:15 AM IST

சுப்புலட்சுமி ஜெகதீசன் பா.ஜ.க.வில் சேர மாட்டார் என்று டி.கே.எஸ்.இளங்கோவன் நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னை,

தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. துணை பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் உடல்நலிவு காரணமாக கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். ஆனால் இதே பொறுப்பு வகித்த வி.பி.துரைசாமி அரசியல் ரீதியாக தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தார். அது வேறு. இது வேறு. இரண்டையும் ஒப்பிடக்கூடாது. சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் இருந்து விலகினாலும் தி.மு.க. உணர்வுடன்தான் இருக்கிறார். அவர் பா.ஜ.க.வில் இணைகிறேன் என்று சொல்லவில்லை. சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகலுக்கு புதிதாக நாங்கள் எந்த காரணமும் கூற முடியாது.

ஆனாலும் அவரது கணவர் ஜெகதீசன் சமூக வலைதளங்களில் தி.மு.க.வை பற்றி விமர்சித்து வருகிறார். அவரது பதிவுகளை நீக்கக்கோரி எச்சரிக்கை கடிதம் அனுப்பி இருக்கிறோம். அவர் தி.மு.க.வில் உறுப்பினர் இல்லை. நாங்கள் வேறு என்ன செய்ய முடியும்?

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்