< Back
மாநில செய்திகள்
திருமுல்லைவாயல் அருகே சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
சென்னை
மாநில செய்திகள்

திருமுல்லைவாயல் அருகே சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
7 Jun 2022 7:43 AM IST

போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆவடி:

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 56). இவர், அம்பத்தூர் போக்குவரத்து போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மணலி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணி மாற்றம் செய்யப்பட்டார்.

இவருடைய மனைவி சந்திரகலா. இவர்களுக்கு விக்னேஷ் என்ற மகனும், சர்மிளா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

நேற்று முன்தினம் இரவு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தனது குடும்பத்தாருடன் வில்லிவாக்கம் பகுதியில் உள்ள தியேட்டருக்கு சென்று சினிமா பார்த்துவிட்டு இரவு வீட்டுக்கு திரும்பி வந்தார். பின்னர் அனைவரும் தூங்கி விட்டனர்.

நேற்று காலை அவருடைய மனைவி சந்திரகலா எழுந்து பார்த்தபோது வீட்டில் உள்ள மின்விசிறியில் தனது கணவர் சுப்பிரமணியன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருமுல்லைவாயல் போலீசார் தூக்கில் தொங்கிய சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்