< Back
மாநில செய்திகள்
துணை மின்நிலைய அலுவலகத்துக்கு இடம் தேர்வு குறித்து ஆய்வு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

துணை மின்நிலைய அலுவலகத்துக்கு இடம் தேர்வு குறித்து ஆய்வு

தினத்தந்தி
|
21 March 2023 12:30 AM IST

அம்மையநாயக்கனூரில் துணை மின்நிலைய அலுவலகத்துக்கு இடம் தேர்வு செய்வது தாசில்தார் ஆய்வு நடத்தினார்.

அம்மையநாயக்கனூர் ஊர் பொதுமக்கள் இளைஞர் நற்பணி மன்றத்தினர் சார்பில் அம்மையநாயக்கனூர், கொடைரோடு வழியாக செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பஸ்கள் புறக்கணிப்பதை கண்டித்தும், அம்மையநாயக்கனூர் மின்சார துணை மின்நிலைய அலுவலகம் பள்ளபட்டி சிப்காட்டுக்கு இடம் மாற்றம் செய்வதை நிறுத்த கோரியும் 4 வழிச்சாலையில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். இதுகுறித்து சமதான கூட்டம் அம்மையநாயக்கனூர் போலீஸ்நிலையத்தில் நேற்றுமுன் தினம் நடந்தது. இதில் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று அம்மையநாயக்கனூரில் துணை மின்நிலைய அலுவலகம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்ய தாசில்தார் தனுஷ்கோடி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது தாசில்தார் கூறுகையில், அம்மைநாயக்கனூரில் பயன்பாட்டுக்கு இல்லாத நர்சுகள் குடியிருப்பு கட்டிடத்தில் துணை மின்நிலைய அலுவலகம் அமைக்க மாவட்ட நிர்வாகத்துக்கு ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றார்.

ஆய்வின்போது, நிலக்கோட்டை தி.மு.க. துணைச் செயலாளர் ராஜாங்கம், அம்மையநாயக்கனூர் பேரூராட்சி துணைத் தலைவர் விமல்குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் மாரியப்பன், கருணாகரன், இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் முருகேசன், சீனிவாசன், வீரன், அழகப்பன், அம்மையநாயக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்லா ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்