பெரம்பலூர்
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு
|வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையருமான அனில் மேஷ்ராம், கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா முன்னிலையில் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் பெரம்பலூர் முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தையும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3.42 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தையும், பாடாலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.1.45 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக அவர் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பெரம்பலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்திலும் கலந்து கொண்டார்.