< Back
மாநில செய்திகள்
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி குறித்த ஆய்வு கூட்டம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி குறித்த ஆய்வு கூட்டம்

தினத்தந்தி
|
1 Sept 2023 12:15 AM IST

திருக்கோவிலூரில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

திருக்கோவிலூர்,

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி குறித்த ஆய்வுக்கூட்டம் திருக்கோவிலூரில் நடந்தது.

இதற்கு கோட்டாட்சியர் கண்ணன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், வீடு வீடாக சென்று எவ்வாறு வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும் என்பது பற்றி அதிகாரிகளுக்கு விளக்கி கூறினார். குறிப்பாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல் தொடர்பாக பெறப்பட்ட விண்ணப்பங்களை சரியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார். இதில் தேர்தல் துணை தாசில்தார், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்