< Back
மாநில செய்திகள்
போதை பொருள் ஒழிப்பு குழு அமைப்பது தொடர்பான ஆய்வு கூட்டம்
கரூர்
மாநில செய்திகள்

போதை பொருள் ஒழிப்பு குழு அமைப்பது தொடர்பான ஆய்வு கூட்டம்

தினத்தந்தி
|
7 Aug 2022 11:45 PM IST

போதை பொருள் ஒழிப்பு குழு அமைப்பது தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் போதை பொருள் ஒழிப்பு குழு அமைப்பது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி மற்றும் கல்லூரி துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) பள்ளி மாணவர்களை கொண்டு பேரணி நடத்துவது, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவது. புத்தக திருவிழாவில் போதை பொருள் ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த அரங்கு அமைப்பது, சுதந்திர தினவிழாவில் போதை பொருள் ஒழிப்பு தொடர்பாக கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது.மேலும் போதை பொருள் ஒழிப்பு தொடர்பாக காவல்துறை மற்றும் சுகாதார துறை இணைந்து பணியாற்றுவது.பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் கரூர் அரசு கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் வருகிற 12-ந்தேதி விழிப்புணர்வு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்திட வேண்டும். பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் 17-ந்தேதி பள்ளி மற்றும் கல்லூரியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்திட வேண்டும். மேலும், காவல்துறை மற்றும் சுகாதார துறை இணைந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து மொத்த விலை மற்றும் சில்லரை விலை மருந்து கடைகளின் உரிமையாளர்களுக்கு போதை பொருள் ஒழிப்பு தொடர்பாக அறிவுரை வழங்குவது தொடர்பாக கூட்டம் நடத்தப்பட வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்