தாம்பரத்தில் புயல் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
|சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ‘மிக்ஜம்’ புயலை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 'மிக்ஜம்' புயலை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, சோழிங்கநல்லூர் அரவிந்த் ரமேஷ், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி கண்காணிப்பு அலுவலர் ஜான்லூயிஸ், மாநகராட்சி கமிஷனர் அழகுமீனா, தாம்பரம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் பவன்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த்குமார் சிங், மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், இ.ஜோசப் அண்ணாதுரை, ஜெயபிரதீப் சந்திரன், வே.கருணாநிதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண முகாமை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார். மேலும் மூவரசம்பட்டு ஏரியையும் பார்வையிட்டார்.