< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூரில்  சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வுக்கூட்டம்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

திருப்பத்தூரில் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வுக்கூட்டம்

தினத்தந்தி
|
28 Aug 2022 12:48 AM IST

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியாக நடத்துவது குறித்தும், போதை பொருட்கள் விற்பனை தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, உதவி ஆணையர் (கலால்) பானுமதி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் கணேஷ், சுரேஷ்பாண்டியன் மற்றும் அனைத்துறை அரசு அலுவலர்கள், தாசில்தார்கள் கலந்துகொண்டனர்.


மேலும் செய்திகள்