< Back
மாநில செய்திகள்
கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

தினத்தந்தி
|
21 Nov 2022 9:20 PM IST

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசுகையில், நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மழையினால் சேதமடைந்து உள்ள பாதைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் முறையாக செயல்படுத்த வேண்டும்.

மகளிர் சுய உதவிக்குழுக்கள் உறுப்பினர்களை கொண்டு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். கால்நடை துறையின் மூலம் கால்நடை சந்தையில் கலந்து கொள்பவர்கள் இந்தாண்டு பதிவு முறையினை கடைபிடிக்க வேண்டும்.

ஆங்காங்கே பக்தர்கள் அறியும் வகையில் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பர வாகனத்தினை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தீபத் திருவிழா குறித்து மேற்கொள்ளப்படும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர்பிரதாப்சிங், செய்யாறு சப்-கலெக்டர் அனாமிகா, உதவி கலெக்டர் (பயிற்சி) ரஷ்மிராணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்