திருநெல்வேலி
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைதிட்ட ஆய்வு கூட்டம்
|நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை திட்ட ஆய்வு கூட்டம் நடந்தது.
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் நலத்துறை தலைவர் காஜா மைதீன் தலைமை தாங்கினார். அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆய்வு கூட்டத்தின் போது நெல்லை மாவட்டத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள 5 பயனாளிகளுக்கு தமிழ்நாடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் காஜா மைதீன் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள தேய்ப்பு பெட்டிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பபதிவாளர் அழகிரி, மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் சுபாஷினி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.