< Back
மாநில செய்திகள்
கற்போர் மையத்தில் முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

கற்போர் மையத்தில் முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

தினத்தந்தி
|
10 Jan 2023 1:09 AM IST

கற்போர் மையத்தில் முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் 'புதிய பாரத எழுத்தறிவு திட்டம்' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பயிற்றுவிக்க பெரம்பலூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 142 கற்போர்கள் கண்றியப்பட்டு, அவர்களுக்கு குடியிருப்பு பகுதிகளில் உள்ள பள்ளி வளாகம், பணிபுரியும் இடங்களில் 271 கற்போர் மையங்கள் தேர்வு செய்யப்பட்டு கல்வி தன்னார்வலர்களை கொண்டு எழுத படிக்க பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் ஒன்றியத்தில் 64 மையங்களில் 64 கல்வி தன்னார்வலர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் எளம்பலூரில் கற்போர் மையத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் பார்வையிட்டு எழுத்தறிவு பெறுவதன் அவசியத்தை கற்போர்களிடம் எடுத்துரைத்து கற்போர்களை ஆர்வப்படுத்தினார். அப்போது மாவட்ட ஒருங்கிணைப்பாளர், மையத்தின் தன்னார்வலர் ஆசிரியர், பள்ளி தலைமை ஆசிரியர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்