< Back
மாநில செய்திகள்
பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
மாநில செய்திகள்

பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

தினத்தந்தி
|
14 Nov 2023 6:57 PM IST

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் தொடர்புகொள்ள அவசர எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை,

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் தொடர்புகொள்ள அவசர எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தாம்பரம் மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை இடர்பாடுகள் குறித்த புகார்களுக்கு அவசர எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கட்டணமில்லா தொடர்பு எண்கள் 1800 425 4355, 1800 425 1600 ஆகிய எண்களை அழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. +91 84383 53355 என்ற எண்ணில் வாட்ஸ்-ஆப் மூலமும் புகாரளிக்கலாம்.

மழை பாதிப்பு தொடர்பாக 24 மணி நேர அவசரகால மையத்தை 1070,1077 என்ற எண்களில் மக்கள் அழைக்கலாம் என்றும்,9445869848 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

இந்நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சென்னையின் தற்போதைய மழை நிலவரம், நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், மழை அதிகமுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் காணொலியில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் செய்திகள்