< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு
|24 May 2023 12:19 AM IST
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக மெர்சி ரம்யா பொறுப்பேற்ற பின் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் அரசு மருத்துவமனைகளிலும் நேரில் சென்று நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து, ஆய்வு மேற்கொள்கிறார். அந்த வகையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இதேபோல மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்திருந்தவர்கள், படுத்திருந்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.