தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும்திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு
|பென்னாகரம்
இயக்குனர் ஆய்வு
பென்னாகரம் பேரூராட்சியில் ரூ.2.66 கோடியில் கழிவுநீர் தொட்டிகள், ரூ.4.50 கோடியில் பஸ் நிலைய கட்டுமான பணி, ரூ.1.50 கோடியில் நவீன எரிவாயு தகன மேடை, ரூ.11.75 லட்சம் மதிப்பீட்டில் வளம் மீட்பு பூங்காவில் மக்கும் கழிவுகளை பிரிக்கும் பகுதிக்கு மேற்கூரை அமைக்கும் பணி உள்ளிட்ட திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண் குர்லா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பென்னாகரம் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை 3 மாதத்திற்குள் முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது நிர்வாக பொறியாளர்கள் கணேச மூர்த்தி, மகேந்திரன், உதவி நிர்வாகப்பொறியாளர் சுப்பிரமணி, உதவி பொறியாளர் பழனி, பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி, செயல் அலுவலர் கீதா, துணைத்தலைவர் வள்ளியம்மாள் பவுன்ராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பாலக்கோடு
பாலக்கோடு பேரூராட்சியில் ,பஸ் நிலைய சீரமைப்பு பணிகள், வளம் மீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை திட்டம், ஜல்சத்தி திட்டத்தில் வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குதல் மற்றும் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சென்னை பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண்குராலா ஆய்வு செய்தார்.
அப்போது பாலக்கோடு பஸ் நிலைய சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது மண்டல பேரூராட்சி உதவி இயக்குனர் குருராஜன், மண்டல செயற்பொறியாளர்கள், மாவட்ட உதவி செயற்பொறியாளர்கள், பேரூராட்சி தலைவர் முரளி, செயல் அலுவலர் டார்த்தி, துப்புரவு மேற்பார்வையாளர் ரவீந்திரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
பாப்பாரப்பட்டி
பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் வாரச்சந்தை வளாகத்தில் 156 கடைகள் கட்டுதல் உள்ளிட்ட திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பேரூராட்சிகள் இயக்குனர் கிரண்குராலா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் சின்ன ஏரியில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரித்து தூய்மையான நீரை ஏரியில் விடவேண்டும். அதற்கு தேவையான நிதி ஒதுக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது பேரூராட்சிகள் உதவி இயக்குனர் குருராஜன், பாப்பாரப்பட்டி பேரூராட்சி தலைவர் பிருந்தா, செயல் அலுவலர் கோமதி, இளநிலை பொறியாளர்கள் பழனி, ராமலிங்கம் மற்றும் பேரூராட்சிகள் அலுவலர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.