< Back
மாநில செய்திகள்
சாலை பணிகளை அதிகாரிகள் ஆய்வு
நாமக்கல்
மாநில செய்திகள்

சாலை பணிகளை அதிகாரிகள் ஆய்வு

தினத்தந்தி
|
19 May 2023 12:15 AM IST

ராசிபுரத்தில் சாலை பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ராசிபுரம்

தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை அலகில் செயல்பட்டு வரும் திட்ட பணிகளை உள் தணிக்கை குழு செய்யும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம், ராசிபுரம் உட்கோட்டத்தைச் சேர்ந்த மல்லியகரை- ராசிபுரம்-திருச்செங்கோடு-ஈரோடு சாலை அகலப்படுத்தும் பணியினை சேலம் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் அருள்மொழி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது நாமக்கல் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் கோட்ட பொறியாளர் குணா, சேலம் நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் நெடுஞ்சாலை அலகின் உதவி கோட்ட பொறியாளர் பரிமளா, நாமக்கல் நெடுஞ்சாலை தரக்கட்டுப்பாடு உட்கோட்ட அலகின் உதவி கோட்ட பொறியாளர் சோமேஸ்வரி, ராசிபுரம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் உதவி கோட்ட பொறியாளர் ஜெகதீஷ் குமார், உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்குழுவினர் தார் கலவை, சாலையின் தடிமன், பயன்படுத்தும் பொருட்களின் தரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர்.

மேலும் செய்திகள்