< Back
மாநில செய்திகள்
மின்னாம்பள்ளி ஊராட்சியில் கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு
நாமக்கல்
மாநில செய்திகள்

மின்னாம்பள்ளி ஊராட்சியில் கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு

தினத்தந்தி
|
7 April 2023 12:15 AM IST

மின்னாம்பள்ளி ஊராட்சியில் வருவாய்துறையின் கீழ் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கள ஆய்வில் முதல்-அமைச்சர் திட்டம்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்.

அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் வருவாய் துறையின் கீழ் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் கிராமம் தோறும் கலெக்டர் தலைமையில் வருவாய் கிராமத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் குழு முகாமிட்டு மனுக்கள் மீது தீர்வு காண திட்டமிடப்பட்டு உள்ளது.

கலெக்டர் ஆய்வு

அந்த வகையில் நேற்று மின்னாம்பள்ளி ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் வருவாய்த்துறையினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, உதவிகலெக்டர் (பொறுப்பு) பிரபாகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் பாஸ்கர், தாசில்தார் சக்திவேல் உள்பட அரசு அலுவலர்கள் உடன் சென்றனர்.

மேலும் செய்திகள்