< Back
மாநில செய்திகள்
மேம்பால பணிகளை அதிகாரிகள் ஆய்வு
நாமக்கல்
மாநில செய்திகள்

மேம்பால பணிகளை அதிகாரிகள் ஆய்வு

தினத்தந்தி
|
19 March 2023 12:15 AM IST

பள்ளிபாளையத்தில் மேம்பால பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பள்ளிபாளையம்

நாமக்கல் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் மல்லியக்கரை-ராசிபுரம்- திருச்செங்கோடு-ஈரோடு ஆகிய வழித்தடத்தில் சாலை விரிவாக்க பணிகளும், மேம்பால பணிகளும் நடைபெற்று வருகிறது. ஆசிய வளர்ச்சி துறை வங்கி நிதி உதவி உதவியுடன் சென்னை கன்னியாகுமரி தொழில்வழிதடத்திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலை துறை சார்பில் மேற்கண்ட பணிகள் நடந்து வருகிறது. இதையொட்டி பள்ளிபாளையம் பகுதியில் திருச்செங்கோடு சாலையில் ஆசிரியர் காலனி பகுதியிலிருந்து பள்ளிபாளையம் வரை மேம்பாலம் அமைக்க 92 பிரமாண்ட தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மீது 80 டன் எடையுள்ள 2 தூண்கள் இடையில் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியினை சென்னை நெடுஞ்சாலைதுறை சாலை பணி தலைமை பொறியாளர் செல்வன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வில் பாலத்தின் தரம், சாலை சரியானபடி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதா? தூண்கள் சரியான அளவில் அமைக்கப்பட்டுள்ளதா? மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் இரு வழி சாலைகள் அமைக்கும் பணிகளையும், இருவழிசாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணியையும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கோட்ட பொறியாளர் சசிகுமார், உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள், நெடுஞ்சாலைத் துறை ஆலோசகர்கள் உடன் இருந்தனர்

மேலும் செய்திகள்