< Back
மாநில செய்திகள்
ஜல்லிக்கட்டு நடக்கும் மைதானத்தை கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு
நாமக்கல்
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டு நடக்கும் மைதானத்தை கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு

தினத்தந்தி
|
28 Feb 2023 12:15 AM IST

சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்தை நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார்.

சேந்தமங்கலம்

ஜல்லிக்கட்டு

சேந்தமங்கலம் பேரூராட்சியில் உள்ள காந்திபுரத்தில் இருந்து நைனாமலை செல்லும் சாலையில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வருகிற 3-ந் தேதி நடைபெறும் அந்த போட்டியில் சேந்தமங்கலம், நாமக்கல், சேலம் சுற்று வட்டாரங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்க உள்ளன.

அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளையை அனுமதிக்கும் குழுவினர் அது தொடர்பாக காளையை கொண்டு வரும் உரிமையாளர்களிடம் ஆய்வு செய்து வருகின்றனர்.

கலெக்டர் ஆய்வு

இந்தநிலையில் போட்டி நடைபெறும் மைதானத்தை நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார். அப்போது மைதானம் அமைந்துள்ள இடம், வாகனங்கள் நிறுத்தும் இடம், வாடிவாசல் அமைந்துள்ள பகுதி, மாடுகள் வெளியேறும் பகுதி போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ஜல்லிக்கட்டு விழா குழு தலைவர் மணிகண்டனிடம் விவரம் குறித்து கேட்டு அறிந்தார்.

அவருடன் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா, போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ், சேந்தமங்கலம் அட்மா குழு சேர்மன் அசோக்குமார், பேரூராட்சி தலைவர் சித்ரா தனபாலன், சேந்தமங்கலம் தாசில்தார் செந்தில்குமார் மற்றும் வருவாய் துறையினர் போலீசார் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்