நாமக்கல்
வளர்ச்சி பணிகளை அதிகாரிகள் ஆய்வு
|வெண்ணந்தூரில் வளர்ச்சி பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வெண்ணந்தூர்
வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் சிவக்குமார் ஆய்வு செய்தார். முன்னதாக நம்பர்- 3 குமாரபாளையம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 47.66 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் பழந்திப்பட்டி ஊராட்சியில் 14-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் 9.54 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியினை ஆய்வு செய்தார். மேலும் பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் மற்றும் அனைவருக்கும் வீடு வழங்கும் கணக்கெடுப்பு பணியினை அலவாய்பட்டி ஊராட்சியில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், மாதவன் மற்றும் பொறியாளர்கள் பூபதி, கவுரி ஆகியோர் உடன் இருந்தனர்.