நாமக்கல்
வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு
|நாமக்கல்லில் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை பார்வையாளர் ஆய்வு செய்தார்.
வாக்காளர் பட்டியல்
நாமக்கல் மாவட்டத்தில் 9.11.2022 முதல் 8.12.2022 வரை சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்றது. இப்பணிக்கான சிறப்பு முகாம்களும் மாவட்டத்திலுள்ள 686 வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற்றது.
இந்நாட்களில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான மனுக்கள் பொதுமக்கள் மூலம் பெறப்பட்டது. இந்த நாட்களில் பெறப்பட்ட படிவங்கள் பதிவேற்றம் செய்யும் பணியினை மேற்பார்வையிடும் பொருட்டு, வாக்காளர் பட்டியல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்துகழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சிவசண்முகராஜா தலைமையில், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் முன்னிலையில் நேற்று அனைத்து அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
ஆய்வு
மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் தொடர்பாக விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சிவசண்முகராஜா கள ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா, தாசில்தார் சக்திவேல், தனி தாசில்தார் (தேர்தல்கள்) பிரகாசம், நாமக்கல் நகராட்சி ஆணையர் சுதா மற்றும் தேர்தல் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.