புதுக்கோட்டை
சிலம்பத்தில் மாணவ-மாணவிகள் உலக சாதனை
|சிலம்பத்தில் மாணவ-மாணவிகள் உலக சாதனை படைத்துள்ளனர்.
கீரனூர் சேதுபதி சிலம்ப பாசறை சார்பில் சிலம்ப போட்டியில் இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் சென்னையில் நடைபெற உள்ள இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் ஆசிய அளவிலான விருது நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராஜலட்சுமி (வயது 24) கண்ணன் (14), தவதனிஷ்கா (6) ஆகிய 3 பேரும் தேர்வாகினர். ராஜலட்சுமி தொடர்ந்து 5 மணி நேரம் ஐஸ் கட்டி மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை செய்தார். இதேபோல கண்ணன் 5 அடி கட்டைக்காலின் மீது நின்று தொடர்ந்து 5 மணி நேரம் இரட்டைக் கம்பு சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தார். சிறுமி தவதனிஷ்கா 2.30 மணி நேரம் ஒற்றைக்கம்பும், 2.30 மணி நேரம் இரட்டைக் கம்பும் தொடர்ந்து சுற்றி சாதனை படைத்தார். அவர்களுக்கு சேதுபதி சிலம்ப பாசறை மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.