< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் அதை நினைத்து கவலையடையக் கூடாது - அன்புமணி ராமதாஸ்
|6 May 2024 11:44 AM IST
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.56% மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தேர்ச்சி விகிதம் 0.53% அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் உயர்கல்வி சிறப்பாக அமையவும் வாழ்த்துகிறேன்.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் அதை நினைத்து கவலையடையக் கூடாது. அடுத்த மாதமே துணைத் தேர்வுகள் நடத்தப்படவுள்ள நிலையில், அதில் பங்கேற்று தேர்ச்சியடைந்து உயர்கல்வி பயணத்தைத் தொடங்க வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.