< Back
மாநில செய்திகள்
மாணவ-மாணவிகள் சிலம்பத்துடன் நடை பயணம்
மதுரை
மாநில செய்திகள்

மாணவ-மாணவிகள் சிலம்பத்துடன் நடை பயணம்

தினத்தந்தி
|
8 May 2023 1:39 AM IST

பரவையில் மாணவ-மாணவிகள் சிலம்பத்துடன் நடை பயணம் மேற்கொண்டனர்.

வாடிப்பட்டி,

உலக சிலம்ப இளையோர் சம்மேளனம், முத்து நாயகி சிலம்ப பள்ளி இணைந்து தமிழர் பாரம்பரிய சிலம்ப கலை விழிப்புணர்வுக்காக பரவையில் மாணவ-மாணவிகளின் சிலம்பு நடைபயணம் நடந்தது. து லண்டன் கார்வேர்டு வேல்டு ரெக்கார்ட் சாதனை புத்தகத்திற்காக நடந்தது. இதில் 200 மாணவர்கள் 10 கிலோ மீட்டர் தூரம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றியபடி நடை பயணம் சென்றனர். இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் சேர்மன் வக்கீல் மனோகரன் தலைமை தாங்கினார். கிராம நல கமிட்டி நாகமலை, போலீஸ் துணை சூப்பிரண்டு ஜஸ்டின் பிரபாகரன், முன்னாள் சேர்மன் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னாள் துணை சேர்மன் பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.பேரூராட்சி தலைவர் கலா மீனராஜா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த சாதனை நடைபயணம் பரவை பாரதி மைதானம் அருகே ெதாடங்கி சிலம்பம் சுற்றியபடி கருப்பணசாமி கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி வழியாக வளவன் நகர், கோவில் பாப்பாகுடி பிரிவு, அதலை, மதுரா சிட்டி வழியாக பொதும்பு சங்கையா கோவில் வரை சென்று மீண்டும் பரவைக்கு வந்தடைந்தது. இவ்விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி வடமலை பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ், கல்வி புரவலர் சாமிக்காளை, நேதாஜி வே.சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்