< Back
மாநில செய்திகள்
அண்ணா கோளரங்கத்தை பார்வையிட்ட மாணவ-மாணவிகள்
திருச்சி
மாநில செய்திகள்

அண்ணா கோளரங்கத்தை பார்வையிட்ட மாணவ-மாணவிகள்

தினத்தந்தி
|
11 Feb 2023 1:27 AM IST

அண்ணா கோளரங்கத்தை மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.

திருச்சி அண்ணா கோளரங்கத்துக்கு விடிவெள்ளி பள்ளியை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய மாணவ-மாணவிகள் கல்விச்சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். அங்கு கோளரங்கத்தை சுற்றி பார்த்த மாணவ-மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கோளரங்க திட்ட இயக்குனர் அகிலன், கோள்களின் முக்கியத்துவம் குறித்தும், சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்தும் விளக்கம் அளித்தார். இதற்கான ஏற்பாட்டை பிஷப்ஹீபர் கல்லூரி சமூக பணித்துறை மாணவி கன்னிஷா செய்திருந்தார்.

மேலும் செய்திகள்