< Back
மாநில செய்திகள்
சேதமடைந்த சாலையால் மாணவர்கள் அவதி
விருதுநகர்
மாநில செய்திகள்

சேதமடைந்த சாலையால் மாணவர்கள் அவதி

தினத்தந்தி
|
16 Aug 2023 12:22 AM IST

சேதமடைந்த சாலையால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி ஊராட்சி கொத்தனார் காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தெற்கு தெருவில் இருந்து கொத்தனார் காலனிக்கு செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும்,குழியுமாக காணப்படுகிறது. ஆதலால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள், மாணவர்கள் என அனைவரும் பெரிதும் அவதிப்படுகின்றனர். மோட்டார் சைக்கிளில் செல்வோர் அடிக்கடி கீழே விழுந்து காயம் ஏற்படுவதாகவும், வாகனங்கள் பழுதடைவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்