< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
பள்ளி வகுப்பறையில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள் அவதி
|6 Aug 2022 11:14 PM IST
இருதுக்கோட்டை அருகே பள்ளி வகுப்பறையில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை தாலுகா இருதுக்கோட்டை அருகே உள்ள கிரியானப்பள்ளி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக பள்ளியின் ஓடு வழியாக வகுப்பறை கட்டிடத்தில் மழைநீர் கசிந்து வருகிறது. வகுப்பறையில் மழைநீர் தேங்கியதால் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகினர். இதனால் மாணவர்களை பெஞ்ச், சேர்களில் அமரவைத்து விட்டு ஆசிரியைகள் மழை நீரை அப்புறப்படுத்தினர்.