சிவகங்கை
ஒற்றைக்காலில் நின்று சிலம்பம் சுற்றி அசத்திய மாணவ-மாணவிகள்
|சிவகங்கையில் ஒற்றைக்காலில் நின்று சிலம்பம் சுற்றி மாணவ-மாணவிகள் அசத்தினர்.
குளோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம் மற்றும் மூவேந்தர் சிலம்பம் அமைப்பு மற்றும் தமிழரின் பாரம்பரிய கலை வளர்ச்சி கழகம் ஆகியவை இணைந்து ஒற்றை காலில் ஒரு மணி நேரம் நின்று 500 மாணவர்கள் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி சிவகங்கையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.சிவகங்கை மாவட்ட மல்லர் கம்பம் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கலைச்செல்வம் வரவேற்று பேசினார். சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த சுமார் 500 மாணவர்கள் ஒற்றைக்காலில் ஒரு மணி நேரம் நின்று சிலம்பம் சுற்றினார்கள்.நிகழ்ச்சியில் சிவகங்கை நகரசபை தலைவர் துரை ஆனந்த் காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன், நேரு இளைஞர் மைய ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார், கேப்டன் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒற்றைக்காலில் நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பார்வையாளர்கள் பாராட்டினார்கள்.