< Back
மாநில செய்திகள்
மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளையொட்டி மாணவிகள் பேரணி
சென்னை
மாநில செய்திகள்

மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளையொட்டி மாணவிகள் பேரணி

தினத்தந்தி
|
16 July 2022 11:22 AM IST

மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளையொட்டி மாணவிகள் பேரணி நடந்தது.

மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் தாளாளர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். பத்திரப்பதிவுத்துறை முன்னாள் தலைவர் ஆறுமுக நயினார் மற்றும் தலைமை ஆசிரியை செல்வி ஜெகஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்.மாரிமுத்து வரவேற்றார். விழாவில் திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து, மாணவிகளின் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் பங்கேற்ற மாணவிகள் காமராஜரின் திட்டங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, காமராஜரின் சிறப்புகளை கூறியபடி நடந்து சென்றனர்.

பின்னர் அரசு மற்றும் தனியார் பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு மணலி சேக்காடு பொது வியாபாரிகள் சங்க நிறுவன தலைவர் மணலி ஏ.தங்கம் ரொக்கப்பரிசு வழங்கினார். சமுதாய தலைவர்கள் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர். முடிவில் மணலி சேக்காடு வட்டார நாடார் ஐக்கிய உறவின்முறை அறங்காவலர் மணலி பாலா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்