< Back
தமிழக செய்திகள்
இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்
தமிழக செய்திகள்

இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
4 Jan 2023 2:24 AM IST

தஞ்சையில் கல்வி உதவித்தொகை வழங்கக் கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்;

தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கிளை நிர்வாகி தமிழரசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அர்ஜுன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையின் விண்ணப்பங்களை இப்போது வரையிலும் தமிழகஅரசு வழங்காமல் இருப்பதை கண்டித்தும், உடனடியாக அனைத்து கல்வி நிலையங்களுக்கும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பிப்பதற்கான படிவத்தை வெளியிட வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்