< Back
மாநில செய்திகள்
கூடுதல் முறை பஸ்கள் இயக்கக்கோரி பள்ளி மாணவ, மாணவிகள் சாலைமறியல்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

கூடுதல் முறை பஸ்கள் இயக்கக்கோரி பள்ளி மாணவ, மாணவிகள் சாலைமறியல்

தினத்தந்தி
|
25 Nov 2022 12:45 AM IST

தஞ்சாவூர் அருகே கூடுதல் முறை பஸ்கள் இயக்கக்கோரி பள்ளி மாணவ, மாணவிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.

தஞ்சாவூர் அருகே கூடுதல் முறை பஸ்கள் இயக்கக்கோரி பள்ளி மாணவ, மாணவிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.

அரசு பஸ்

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை கிராமத்திற்கு வழித்தட எண். 43 என்ற நகர அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் காலை 6.30, 7.30, 11.30, 3.30, 5.30, 7.30, 8.30 மணி ஆகிய 7 முறைகள் இயக்கப்பட்டு வந்தன.

ஆனால், கொரோனா காலத்திற்கு பிறகு தற்போது காலை 8.30 மணி, மாலை 5.30 மணி ஆகிய 2 முறை மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், மழைகாலங்களிலும் அந்த பஸ்கள் வருவதை இல்லை.

மாணவ, மாணவிகள் அவதி

இதனால், வண்ணாரப்பேட்டை, கரம்பை, சிவகாமிபுரம் ஆகிய கிராமங்களில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமலும், பள்ளி முடிந்து வீடு திரும்ப முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து கிராம மக்கள் பல முறை அதிகாரிகளிடம் மனு அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், திருவையாறு புறவழிச்சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் சமரசம்

இதனால், 1 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும், மாணவ, மாணவிகள் சாலை மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சை கோட்ட மேலாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்