< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
பனைவிதைகள் விதைத்த மாணவர்கள்
|16 Oct 2023 10:56 PM IST
கீரமங்கலம் பகுதியில் பனைவிதைகள் மாணவர்கள் விதைத்தனர்.
கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் எந்த ஒரு நிகழ்வு தொடங்கும் முன்பும் மரக்கன்றுகள் நட்டு நிகழ்ச்சியை தொடங்கும் பழக்கம் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. அதே போல தேசிய தலைவர்கள் பிறந்த நாள், நினைவு நாள், தங்கள் வீடுகளில் நடக்கும் திருமணம், காதணி உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள், முக்கிய நிகழ்வுகள் நடக்கும் நாட்களில் மரக்கன்றுகள் நடுவதும் மரக்கன்றுகளை பொதுமக்களிடம் பரிசாக வழங்குவதும் வழக்கமாக உள்ளது. அந்த வகையில் நேற்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் இணைந்து பனை விதைகளை விதைத்தனர். இதில் மாணவ, மாணவிகளுக்கு உள்ளூர் இளைஞர்கள், அப்துல் கலாம் பற்றிய புத்தகங்களை பரிசாக வழங்கி பாராட்டினார்கள்.