< Back
மாநில செய்திகள்
பள்ளி சுவற்றில் ஓவியம் வரைந்த மாணவர்கள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

பள்ளி சுவற்றில் ஓவியம் வரைந்த மாணவர்கள்

தினத்தந்தி
|
12 July 2022 6:09 PM IST

காஞ்சீபுரம் மாநகராட்சியில் என் குப்பை, என் பொறுப்பு என்ற தலைப்பில் 14 பள்ளிகள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பள்ளி சுவற்றில் ஓவியம் வரைந்தனர்.

தூய்மை பாரதம் எனும் நோக்கில் இந்தியா முழுவதும் திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் காஞ்சீபுரம் மாநகராட்சியில் என் குப்பை, என் பொறுப்பு என்ற தலைப்பில் 14 பள்ளிகள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட ஓவியம், கட்டுரை மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் போட்டி நடைபெற்றது.

காஞ்சீபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளி முகப்பு சுவரில் ஓவிய ஆசிரியர் உதவியுடன் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர்.

பொதுமக்கள் அதிகம் பார்க்கும் வகையில் இது போன்ற ஓவியங்கள் காஞ்சீபுரம் நகர் முழுவதும் சாலையோரங்களில் உள்ள சுவர்களில் வரைந்து அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் காஞ்சீபுரம் என் குப்பை, என் பொறுப்பு திட்டத்தில் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்