< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
தடகள போட்டியில் ஆவுடையார்கோவில் அரசு பள்ளி மாணவர்கள் தங்கம் வென்று சாதனை
|23 Oct 2022 1:06 AM IST
தடகள போட்டியில் ஆவுடையார்கோவில் அரசு பள்ளி மாணவர்கள் தங்கம் வென்று சாதனை படைத்தனர்.
புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவில் நடைபெற்ற தடகள போட்டியில் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மும்முறை தாண்டுதலில் மூத்தோர் 19 வயது பிரிவில் சக்திவேல் மற்றும் 17 வயது பிரிவில் தனுஷ்குமார் ஆகியோர் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். மேலும் நீளம் தாண்டுதலில் மூத்தோர் பிரிவில் தனுஷ்குமார் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மாவட்ட அளவில் 3 தங்க பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் பாக்கியராஜூக்கும், பள்ளியின் தலைமையாசிரியர் தாமரைச்செல்வன், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவி கவிதா உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.