< Back
மாநில செய்திகள்
நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை
மாநில செய்திகள்

நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
12 July 2023 1:20 PM IST

நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இளநிலை மருத்துவ படிப்பு முடித்த மாணவர்கள் முதுநிலையில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு 'பி.ஜி. நீட்' என்கிற தேர்வை எழுதி வந்தனர். இந்த நிலையில், அதற்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையம் 'நெக்ஸ்ட்' எனப்படும் புதிய தேர்வு முறையை அறிமுகம் செய்துள்ளது. அடுத்த ஆண்டு மே மாதம் முதல் இந்த நெக்ஸ்ட் தேர்வு நடைபெறும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், நெக்ஸ்ட் தேர்வுக்கு தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ கல்வி பயிலும் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தை தொடங்கியுள்ளனர். அந்த வகையில், ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரியில் நேற்று 100-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டையில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்