< Back
மாநில செய்திகள்
பள்ளி சீருடைகளில் வரும் மாணவர்களை அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் - போக்குவரத்து துறை
மாநில செய்திகள்

பள்ளி சீருடைகளில் வரும் மாணவர்களை அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் - போக்குவரத்து துறை

தினத்தந்தி
|
31 May 2023 9:32 AM IST

பள்ளி சீருடைகளில் வரும் மாணவர்களை அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

சென்னை,

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து வரும் 7ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பள்ளி சீருடைகளில் வரும் மாணவர்களை அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என போக்குவத்து துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை காண்பித்து மாணவர்கள் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சீருடை அணிந்திருந்தாலோ அல்லது அடையாள அட்டைகளை வைத்திருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்