< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
போதைப்பொருளுக்கு எதிராக மாணவ-மாணவிகள் மனிதச்சங்கிலி
|19 Aug 2022 5:08 AM IST
போதைப்பொருளுக்கு எதிராக மாணவ-மாணவிகளின் மனிதச்சங்கிலி நடந்தது.
திருச்சி மாநகரில் போதைப்பொருட்களுக்கு எதிராக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநகர காவல்துறை சார்பில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மனிதச்சங்கிலி திருச்சி கோர்ட்டு அருகே நேற்று காலை நடைபெற்றது. கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் அஜய்தங்கம் மனிதச்சங்கிலியை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியடி கோர்ட்டு அருகே இருந்து ஹீபர்ரோட்டில் வரிசையாக நின்று மனிதச்சங்கிலியில் பங்கேற்றனர். மேலும், போதைப்பொருளுக்கு எதிராக கோஷமும் எழுப்பினர். நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன், பள்ளி தலைமை ஆசிரியர் வில்சன்டேனியேல் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.