< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
45 ஆண்டுகளுக்கு முன் படித்த பள்ளிக்கு மாணவர்கள் செய்த உதவி - நெகிழ்ச்சி சம்பவம்
|25 Nov 2022 10:33 PM IST
45 ஆண்டுகளுக்கு முன் படித்த பள்ளிக்கு மாணவர்கள் தற்போது உதவி செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,
சென்னை திருவொற்றியூரில் இயங்கி வரும் எம்.டி.எம் துவக்க பள்ளிக்கு, அதே பள்ளியில் 45 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் அன்பளிப்பாக மேசை மற்றும் இருக்கைகள் வழங்கினர். எம்.டி.எம் துவக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தரையில் அமர்ந்து படித்து வந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
இதனை அறிந்த முன்னாள் மாணவர்கள் சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பிலான மேசை மற்றும் இருக்கைகளை வழங்கினர். மேலும் பள்ளிக்கு தேவையான மற்ற பொருட்களையும் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் முன்னாள் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.