< Back
மாநில செய்திகள்
ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கிய மாணவர்கள்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கிய மாணவர்கள்

தினத்தந்தி
|
7 Sept 2023 2:15 AM IST

ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கிய மாணவர்கள்

வால்பாறை

வால்பாறை பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஆசிரியர்களை மாணவ-மாணவிகள் கைதட்டி வரவேற்றனர். பின்னர் அவர்களுக்கு, பரிசுகளை வழங்கினார்கள். மேலும் நடனம் ஆடியும், நகைச்சுவை நாடகங்களை நடத்தியும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள உண்டு உறைவிடப்பள்ளியில் மாணவர் ஒருவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் படம் வரைந்து அவரை போல வேடமணிந்து நின்று ஆசிரியர்களுக்கு வாழ்த்து கூறியது அனைவரையும் கவர்ந்தது. இதேபோன்று வால்பாறை சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்