கல்லூரி விடுதியில் பிரியாணி சாப்பிட்ட மாணவிகள் உடல்நலம் பாதிப்பு - கேன்டீன் உரிமையாளருக்கு நோட்டீஸ்
|மருத்துவக் கல்லூரி விடுதியில், பிரியாணி சாப்பிட்ட மாணவிகள் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு,
கேளம்பாக்கம் தனியார் மருத்துவக் கல்லூரி விடுதியில், பிரியாணி சாப்பிட்ட மாணவிகள் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் தனியார் மருத்துவக் கல்லூரி விடுதியில், சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சில மாணவிகள் உடல்நலம் தேறிய நிலையில் 6 பேருக்கு மட்டும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, கேண்டின் உரிமையாளர் மற்றும் வார்டனுக்கு நோட்டீஸ் வழங்கினர். காரம் அதிகம் இருந்ததால் இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டதாக விடுதி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் மாணவிகளிடம் விசாரணை நடத்தவும், விடுதி சமையலறை பொருட்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.